Tuesday, November 17, 2009

How to name it !

இசைந்தால்.. நம் இருவரின் ஸ்வரமும் நமதாகும்!!
திசை வேறானாலும்..ஆழிசேர் ஆறுகள் முகிலாய்
மழயாய் பொழிவது போல்...
இசை.. நம் இசை.... !

இசை நம் வாழ்வோடு கலந்த ஒன்று.. like oxygen. சில நேரங்களில் 24 மணிநேரமும் தொடர்ச்சியாக பாடல் கேட்பவர்களும் உண்டு. ஒரு ரயில் பயணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.. இசை பற்றியும் இசைஅமைப்பாளர் பற்றியும் பேச தொடங்கினால்.. சுற்றி இருக்கும் அனைவரும் அந்த discussion இல் பங்கு கொள்வர் :) . அந்த அளவுக்கு அனைவருக்கும் உடைமையானது இசை.

தமிழ் சினிமாவில் இசைப் புரட்சி மூன்று முறை நடந்தது என்று சொல்லலாம்.
இளையராஜா , ஏ ஆர் ரஹ்மான் , ஹாரிஸ் ஜெயராஜ்.

இதில் நான் மிகவும் ரசிக்கும் , வணங்கும்
இசை கடவுள்.. திரு. இளையராஜா. அவருக்கு இந்த post ஒரு சிறு சமர்ப்பணம்.

ராஜா என்றால் ஆளப் பிறந்தவன். தன் இசையால் 3 decades dominate செய்து.. இன்றும் நம்மால் அவரது இசை பிடியில் இருந்து வெளியே விட வில்லை .
அன்னக்கிளியில் ஆரம்பித்து இன்று வரை.. சங்கீத ஞானமே சினிமாவுக்குள்வந்து தான் கற்று கொண்டார் என்று கேள்வி பட்டேன். ஆனால் 'சிந்து பைரவி' , 'உன்னால் முடியும் தம்பி' போன்ற carnatic music centered படங்களை பார்த்த பொது.. அவரை கை கூப்பி வணங்கலாயினேன்.
மானிடர் ஊனம் இல்லாமல் பிறப்பது பெரிய புண்ணியம் என்று என்னவள் சொல்வதுண்டு . அத்தகைய மனிதர் இத்தகைய மாபெரும் ஞானத்துடன் பிறப்பது என்பது மிகவும் அரிது.

ஒருவன் 'மது, மாது' வழியாக உச்சத்தை அடையலாம். இதனுடன் இசைவழியாகவும் அதனை அடையலாம் என்று எனக்கு கற்பித்தது அவர் பாடல்கள். சோக சமயங்களில் கேட்பதற்காகவே 'How to name it?' , 'Mood Kaapi'. அவர் எந்தஅளவு இசையை ஆட்சி செய்கிறார் என்பது 'Three in One' கேட்டால் புரிந்து போகும்.

இன்றைய youth ராஜாவின் 'ஏப்ரல் மேயிலே ' , 'ராஜா ராஜாதி ராஜன்' போன்ற பாடல்களால் மேலும்
மேலும் புத்துணர்வு அடைகிறார்கள்.
"திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்..". ஆனால் எவராய் இருந்தாலும் இளையராஜாவின் 'திருவாசகம்' கேட்டு உருகி போவார்.

தனிமை மற்றும் காதலில் காத்திருத்தலை அழகான வயலின் இசையால் தடவி சொல்வர்.
'நான் உன்னை நீங்க மாட்டேன்.. நீங்கினால் தூங்க மாட்டேன்' என்னும் வரிகளுக்கு உயிர் கொடுத்தவர். அவரது படங்களில் வரும் பின்னணி இசையை மிஞ்சும் வகையில் எவரும்
இதுவரை அமைத்தது இல்லை. 'நாயகன்', 'மௌன ராகம்' போன்ற படங்களை நான் BGM- காகவே பார்த்தது உண்டு :) .

இசையை தவிர இவருக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. 'பாடலாசிரியர்
' .
'தென்றல் வந்து தீண்டும் பொது என்ன வண்ணமோ'.. பாடல் எழுதி, இசையும்அமைத்து, பாடியும் கொடுத்து நம்மை உச்சத்துக்கு கொண்டு செல்பவர். அவருடைய தமிழ் மொழி மேல் உள்ள பக்தி மற்றும் வல்லமையை கவிஞர் வாலிக்கு வழங்கிய வாழ்த்துரையில் காணலாம். பிரம்மித்து போன ஜீவன்களுள் நானும்ஒன்று.

'நீ பார்த்த பார்வை', 'கல்யாண மாலை' , 'கண்ணே கலை மானே
' கேட்டு கண்ணீர் வடிக்காத கண்கள் இல்லை இங்கே. அதே நேரம் 'எடுத்து நான் விடவா' , 'தண்ணி தொட்டி' கேட்டு ஆடாத கால்களும் இல்லை :) .

How to make several version out of a single tune? He has the answer !
http://www.musicquencher.com/blog/2009/08/25/multiple-versions-of-a-single-tune/

TMS (Thiyagarajar, Muthusamy theetchidar, Shyama Shastry) இசை வளர்த்தமூவேந்தர்கள். இவர்களுக்கு பின் இளையராஜாவின் பெயர் பொறிக்க படவேண்டும் என்பது என் ஆசை.
Contribute please : http://www.petitiononline.com/raaja/

ஒன்று கூறி முடித்து கொள்கிறேன்...
"உயிர்கள் அனைத்தும் இசைக்கு அடிமை...
ஆனால் உமக்கோ ... இசை அடிமை... !"

தங்கள் இசையால் மேலும் எங்களை ஆள்வீராக !



Song of the day : Muthamizhae - Raman Abdullah ( SPB , Chitra )

6 comments:

Anonymous said...

Awesome mapla...

Karthik said...

good one...

Legolas said...

I would say your best. I might definitely be biased, given the fact the I am a die-hard illayaraja fan...

The wonderful aspect about illayaraja's music is that there was scope for the singer to show his talent as well.. That is one thing that is lacking with the music of today, there is lot of jazz , lot of instruments, shattering glasses etc etc , but the essence of the song is delivered by the way illayaraja went about..

One more thing not related to illayaraja directly but I would like to add to this already terrific post is, those days there was a tremendous importance put in on the lyrics, the song as such should mean something, we would hardly see a song badly written, the lyrics in itself carry a rhythm which I miss these days.. Given the relative quality of lyrics today,I would say ARR and harris Jeyaraj are doing a gr8 job

Bee'morgan said...

Good one da.. :)

Sara's World said...

Hats off Smiley for your wonderful post about Raja sir!!! :-)

ரெஜோ said...

கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டிருக்க ... நல்லா இருக்கு .. :-) ஆனா இன்னும் கொஞ்சம் நல்லா எழுதிருக்க முடியும் உன்னால ...